சக வீரரை கொலை செய்த புகார்: தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது Web Team

சக வீரரை கொலை செய்த புகாரில், தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக வீரரான ராணா தன்கட்டுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.

மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை, அவரது  நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதையடுத்து, சாகர் தன்கெட் மரணத்தை கொலை வழக்காக போலீஸார் மாற்றி மல்யுத்த வீரர் சுஷில் குமாரைத் தேடி வந்தனர். கடந்த இரு வாரங்களாக தனிப்படை அமைத்து சுஷில் குமாரை பல்வேறு மாநிலங்களில் தேடி வந்தனர். மேலும் சுஷில் குமார் இருப்பிடம் குறித்து துப்பு அளித்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீஸார் அறிவித்தனர்.

சுஷில் குமாரை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு, சுஷில் குமாரை அதிரடியாக கைது செய்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMfrom Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3vh8PJ6

Post a Comment

Previous Post Next Post